காஷ்மீரில் ஆளில்லா விமானம் மோதி ராணுவ வீரர் பலி

வானில் வட்டமடித்து பறந்தபோது திடீரென அந்த ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் கதூவா அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானப்படைத்தளம் உள்ளது. விமானப்படை போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை இயக்கும் தளமாக விளங்கும் அதனை சுற்றி கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இந்திய விமானப்படை சார்பில் புதிய ரக ஆளில்லா விமானம் ஒன்று அங்கு சோதித்து பார்க்கப்பட்டது. வானில் வட்டமடித்து பறந்தபோது திடீரென அந்த ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்குள்ள கண்காணிப்பு கோபுரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கோபுரத்தில் கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்த நாயக் சுரேந்திரன் என்பவர் இறந்தார்.
Related Tags :
Next Story






