பஞ்சாப் பெண் அமைச்சர் ரஸியா சுல்தான் திடீர் ராஜினாமா

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவாக ரஸியா சுல்தான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் பெண் அமைச்சர் ரஸியா சுல்தான் திடீர் ராஜினாமா
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட நிலையில் அவருடனான மோதல் காரணமாக தனது முதல் மந்திரி பதவியை அமரிந்தர் சிங் ராஜினாமா செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நவ்ஜோத் சிங் சித்து முதல் மந்திரியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரண்ஜீத் சன்னி முதல் மந்திரியாக பதவியேற்றார். இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து இன்று ராஜினாமா செய்தார். இதனால் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் உச்சகட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து ரஸியா சுல்தான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவாக ரஸியா சுல்தான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மக்களுக்காக குரல் கொடுத்து வந்தவர் எனவும் ரஸியா சுல்தான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com