

புதுடெல்லி,
டோக்லாம் பகுதியில் இந்தியா- சீனா இடையே நிலவும் மோதலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சீனா நேர்மறையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்தோ-திபெதியன் எல்லை போலீசார் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது:- டோக்லாம் பிரச்சினையை பொறுத்தவரையில் விரைவில் தீர்வு காணப்படும். இந்த விவகாரத்தில் சீனா நேர்மறையான நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியா அமைதியயே விரும்புகிறது என்று நான் அனைத்து அண்டைநாடுகளுக்கும் சொல்லிக்கொள்கிறேன். எனினும், இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தங்கள் எல்லையை பாதுகாக்கும் அனைத்து வல்லமையும் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.