உத்தரபிரதேசம்: இந்துத்துவ சக்திகள் தேசத்தை வெறுப்பை நோக்கித் தள்ளுகின்றன; முஸ்லிம் அமைப்பு பொதுச்செயலாளர்

நாங்கள் தலையில் குல்லா அணிந்தால்,தாடி வைத்திருந்தால் அல்லது ஹிஜாப் அணிந்தால் அவர்களுக்கு அதில் சிக்கல் உள்ளது.
உத்தரபிரதேசம்: இந்துத்துவ சக்திகள் தேசத்தை வெறுப்பை நோக்கித் தள்ளுகின்றன; முஸ்லிம் அமைப்பு பொதுச்செயலாளர்
Published on

கான்பூர்,

மராட்டிய மாநிலத்தில் அரசியல் தலைவரான ராஜ் தாக்கரே, மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று சமீபத்தில் பொதுவெளியில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சன்னி முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான சன்னி உலமா சபையின் பொதுச் செயலாளர் ஹாஜி எம் சேல்ஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சில இந்துத்துவ சக்திகள் தேசத்தை வெறுப்பை நோக்கித் தள்ளுகின்றன. இது தர்மமல்ல.

எங்கள் ஆசான்(தொழுகை) 2-3 நிமிடங்களில் முடிவடைந்து விடுகிறது. ஆனால், அவர்களுக்கு அதிலும் கூட சிக்கல் உள்ளது.

அகண்ட பாதை என்றழைக்கப்படும் நிகழ்ச்சியான, குரு கிரந்த சாஹிப் பற்றிய தொடர்ச்சியான பாராயணம் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறும். அவர்களின் 24 மணிநேர அகண்ட் பாதையில், அவர்கள் இரைச்சல் மாசுபாட்டைக் காணவில்லை. வெறும் 2 நிமிட தொழுகையில் ஒலி மாசுபாடு உள்ளதாக சொல்கிறார்கள்.

நாங்கள் தலையில் குல்லா அணிந்தால், தாடி வைத்திருந்தால் அல்லது ஹிஜாப் அணிந்தால் அவர்களுக்கு அதில் சிக்கல் உள்ளது.

இங்கு கும்பல் கொலைகள் நடக்கின்றன. நாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதையும் அவர்கள் கவனிக்கிறார்கள், கண்காணிக்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com