பெண் கொலையில் மருமகன் கைது

ராமநகரில் பெண் கொலையில் மருமகன் கைது செய்யபபட்டுள்ளார்.
பெண் கொலையில் மருமகன் கைது
Published on

ராமநகர்:

ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா டவுனில் வசித்து வந்தவர் கீதா (வயது 32). இவருக்கு திருமணம் முடிந்து கணவர், 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி கீதாவை அவரது வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் கொலை செய்து இருந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சன்னப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கீதா கொலை தொடர்பாக கீதாவின் கணவரின் சகோதரி மகன் அஜய் (24) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், கீதாவுக்கும், அஜய்க்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்து உள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் கீதாவுக் வறொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கீதாவை அஜய் வலியுறுத்தி உள்ளார். இதற்கு கீதா மறுத்துள்ளார். இதனால் அஜய், யூ-டியூப்பில் வீடியோ பார்த்து, கீதாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com