சோனம் வாங்சுக்கிற்கு தொடர் சிகிச்சை

சோனம் வாங்சுக் உயிர் காக்கும் முக்கிய உடல்நலக்குறியீடுகள் சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சோனம் வாங்சு
Published on

புதுடெல்லி,

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 பேர் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த லடாக்கை சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் (வயது 59), பின்னர் ஜந்தர் மந்தரில் தானும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். தேர்வு முறைகேடுகளால் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை தடுக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தனது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.

உடல்நிலை மோசமடைந்தது

தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் கவலை வெளியிட்ட டெல்லி ஐகோர்ட்டு. அவரது உடல்நிலையை தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவிட்டது. விடாப்பிடியாக தனது போராட்டத்தை தொடர்ந்த சோனம் வாங்சுக். நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்துக்கு பேரணியாக சென்று மனு அளிக்க திட்டமிட்டு வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை டாக்டர் கள் பரிசோதித்தனர். அப்போது அவரது உடலில் 9.5 கிலோ எடை குறைந்திருப்பதாகவும், உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

21 நாள் உண்ணாவிரதம்

ஆனாலும் மிகுந்த உறுதியுடன் நேற்று தனது 21-வது நாள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். ஆனால் காலை 7 மணியளவில் டெல்லி போலீசார் சாதாரண உடையில் உண்ணாவிரத பந்தலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வலுக்கட்டாயமாக சோனம் வாங்சுக்கை அங்கிருந்து தூக்கிச்சென்றனர்.

அப்போது அங்கே இருந்த சக போராட்டக்காரர்கள் வாங்சுக்கை போலீசாரிடம் இருந்து மீட்க போராடினர். இதனால் அங்கு இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரப ரப்பு நிலவியது. பின்னர் சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக ஸ்டிரெச்சரில் ஏற்றிச்சென்ற போலீசார், அவரை சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சோனம் வாங்சுக் உயிர் காக்கும் முக்கிய உடல்நலக்குறியீடுகள் சீரக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர் சிகிச்சை

இதுகுறித்து மருத்​து​வ​மனை நிர்​வாகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில்,

நீண்ட கால உண்​ணா​விரதம் மேற்​கொண்​டது மற்​றும் நீர்ச்​சத்து குறை​பாடு காரண​மாக சோனம் வாங்​சுக் பலவீன​மாக உள்​ளார். தற்​போது அவரது உடல்​நிலை சீராகஉள்​ளது. அவரது உடல் நிலையை இயல்பு நிலைக்​குக் கொண்டு வர அவருக்​குத் தொடர்ச்சி​யான கண்​காணிப்பு மற்​றும் சிகிச்சை தேவைப்படுகிறது.

எனினும், வாங் சுக் நரம்பு வழி திர​வங்​கள், வாய்​வழி ரீஹைட்​ரேஷன் கரைசல் (ஓஆர்​எஸ்) மற்​றும் இதர மருந்​துகள் எதை​யும் எடுத்​துக்​கொள்ள மறுத்​து​விட்​டார். அவரது ஆரோக்​கி​யத்​தைக் கருத்​தில் கொண்டு சிகிச்​சையை ஏற்​றுக்​கொள்​ளு​மாறு அவருக்கு அறி​வுறுத்​தப்​பட்டு வரு​கிறது என்று கூறப்​பட்​டுள்​ளது.

லடாக்கை சேர்ந்த சமூக ஆர்வலர் வாங்சுக், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com