தேசிய பிரச்சினைகள் குறித்து தொடர் போராட்டங்களை திட்டமிட 9 பேர் கொண்ட குழு - சோனியாகாந்தி நியமித்தார்

தேசிய பிரச்சினைகள் குறித்து தொடர் போராட்டங்களை திட்டமிடுவதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் 9 பேர் கொண்ட குழுவை சோனியாகாந்தி அமைத்துள்ளார்.
தேசிய பிரச்சினைகள் குறித்து தொடர் போராட்டங்களை திட்டமிட 9 பேர் கொண்ட குழு - சோனியாகாந்தி நியமித்தார்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சமீபத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையின்போது, நாடு முழுவதும் வருகிற 20-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை கூட்டு போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த பின்னணியில், தேசிய பிரச்சினைகள் குறித்து தொடர் போராட்டங்களை திட்டமிடுவதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் 9 பேர் கொண்ட குழுவை சோனியாகாந்தி இன்று அமைத்தார். மூத்த தலைவர் திக்விஜய்சிங் தலைமையில் இக்குழு செயல்படும்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மக்களவை எம்.பி. உத்தம்குமார் ரெட்டி, மாநிலங்களவை எம்.பி. ரிபுன் போரா மற்றும் மணீஷ் சாத்ரதா, பி.கே.ஹரிபிரசாத், உதித் ராஜ், ராகினி நாயக், சுபேர்கான் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com