

புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டனர். இந்த ஒற்றுமையை தொடர்ந்து எடுத்துச்செல்லும் பொருட்டு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி காணொலி மூலமாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டம் 20-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.