மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சோனியா காந்தி..!

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சோனியா காந்தி..!
Published on

புதுடெல்லி,

கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் உறுதி செய்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சோனியா காந்தியின் உடல்நலம் சீராக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சோனியா காந்தி இன்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சோனியா காந்தி வருகிற 23-ந்தேதி பணமோசடி வழக்கில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com