காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்


காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
x

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையின் காரணமாக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோனியா காந்தி, வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story