முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல்

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவராக இருந்தவர் கருணாநிதி. இவர் உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த ஆகஸ்டு 7ந்தேதி மறைந்து விட்டார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் டிசம்பர் 16ந்தேதி அவரது சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பில் அழைப்பு விடப்பட்டது.

இந்நிலையில், சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். இதுபற்றி அவர் சார்பில் வெளியான கடிதத்தில், கடந்த நவம்பர் 11ந்தேதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திருவுருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கு சோனியா காந்தி அவர்கள் சம்மதித்து எழுதியுள்ள ஒப்புதல் கடிதம் இதனுடன் இணைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com