

ஷிம்லா,
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி ஷிம்லா சென்று இருந்தார். ஷிம்லாவின் ஷரப்ரா பகுதியில் கட்டுமானப்பணி நடைபெற்று வரும் இல்லத்தை பார்வையிட தனது மகள் பிரியங்கா காந்தியுடன் வந்த சோனியா காந்தியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
நேற்று இரவு, அசவுகரியமாக சோனியா காந்தி உணர்ந்ததையடுத்து, ஆம்புலன்ஸ் அனுப்புமாறு சோனியா காந்தியின் மருத்துவரிடம் இருந்து டெல்லி இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மூத்த மருத்துவ கண்காணிப்பாளரான ரமேஷ் என்பவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தனது சொந்தக்காரிலேயே சோனியா காந்தி புறப்பட்டு சென்றார். பின்னர் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வந்தடைந்ததும், சோனியா காந்தி ஆம்புலன்ஸில் ஏறி புறப்பட்டுச்சென்றார். சோனியா காந்தியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர் ரமேஷ் தெரிவித்தார்.