சோனியா காந்தி சில நாட்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் என தகவல்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.
சோனியா காந்தி சில நாட்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் என தகவல்
Published on

டெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 79). இவருக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காற்று மாசு உள்ளிட்ட பருவநிலை மாற்றம் போன்றவற்றால் சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சோனியா காந்தி சில நாட்கள் மருத்துவமனை டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com