உயர் ரத்த அழுத்தம்; சிம்லா மருத்துவமனையில் சோனியா காந்திக்கு சிகிச்சை

சிகிச்சைக்கு பிறகு சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிம்லா,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி(வயது 78), தனது மகள் பிரியங்கா காந்தியுடன் சிம்லாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு திடீரென அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.
சோனியா காந்திக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக லேசான உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்கு பிறகு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு சோனியா காந்தி, சிம்லாவின் சராபா பகுதியில் உள்ள பிரியங்கா காந்தியின் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






