

புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முதுகு வலி காரணமாக, டெல்லி அருகே நொய்டாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் வீடு திரும்பினார்.