மும்பை: தென்ஆப்பிரிக்க பயணிகளுக்கு கட்டாய தனிமை - மாநகராட்சி அறிவிப்பு

புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ள தென்ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மேயர் கிஷோரி பெட்னேகர் அறிவித்து உள்ளார்.
மும்பை: தென்ஆப்பிரிக்க பயணிகளுக்கு கட்டாய தனிமை - மாநகராட்சி அறிவிப்பு
Published on

மும்பை,

தென் ஆப்பிரிக்கா நாட்டில் பி.1.1.529 என்ற வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் சில நாடுகளில் இந்த கொரோனா தென்பட்டு உள்ளது. இதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என கருதப்படும் நிலையில், இந்த வகை தொற்றுக்கு ஒமிக்ரான் என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டு உள்ளது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேக்கர் நேற்று தெரிவித்தார். டெல்லி சென்றிருந்த அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உள்ள புதிய வகை கொரோனா தீவிர பெருந்தொற்றாக கருதப்படுகிறது. இந்த தொற்றின் ஆபத்து அதிகளவில் உள்ளது. எனவே தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து மும்பை வரும் பயணிகள் கட்டாய தனிமையில் வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் இதுபோன்ற நடவடிக்கை அவசியம். இது தொடர்பாக மும்பை மாநகராட்சி ஆலோசனை நடத்த உள்ளது. கடந்த கால அனுபவத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com