

டெல்லி,
டெல்லியில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நாடாளுமன்ற மக்களைவையில் இன்று மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு, பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடிய ஆணையம் இந்த மூன்று மசோதாக்கள் மீது விவாதம் நடக்கிறது.
முதலில் இவை யாவும் முறையில்லை, முதல் இரண்டு மசோதாவும் அரசியல் சட்டத்திருத்தம், மூன்றாவது மசோதா நாடாளுமன்றம் நிறைவேற்றக்கூடிய சாதாரண மெஜாரிட்டி உடன் நிறைவேறக்கூடிய சட்டம். இதை அறிமுகப்படுத்தும் போதே உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் எம்பிக்கள் என அனைவரும் கருப்பு சட்டை மற்றும் அனைவரின் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை காட்டுவோம் என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற முறையில் நாம் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம். தொகுதி மறு சீரமைப்பின் மூலம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வட இந்தியாவில் உள்ள சில சிறு மாநிலங்கள் பெரும் பாதிப்படையும். 543 என்ற உறுப்பினர்கள் 850ஆக உயர்த்தப்படுவது 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி என்று சொல்கிறார்கள். தமிழ்நாடு இன்றும் 1971-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.