தென்மேற்கு பருவமழை தீவிரம்: மராட்டியத்தில் மழைக்கு இதுவரை 18 பேர் பலி


தென்மேற்கு பருவமழை தீவிரம்: மராட்டியத்தில் மழைக்கு இதுவரை 18 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jun 2025 8:23 PM IST (Updated: 16 Jun 2025 8:30 PM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மராட்டிய மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பை,

இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன்படி பருவமழை தொடங்கிய கடந்த மாதம் 24-ந் தேதியில் இருந்தே மராட்டிய மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மழை தொடங்கிய முதல் நாளில் இருந்து இதுவரை மழை தொடர்பான சம்பவங்களால் பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. 65 பேர் காயம் அடைந்துள்ளனர் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்து உள்ளது. சாலை விபத்துகள், பாலங்களில் இருந்து விழுதல், நீரில் மூழ்குதல், மின்னல் தாக்குதல் மற்றும் தீ விபத்து உள்ளிட்ட பலத்த மழையால் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களில் இந்த இறப்புகள் பதிவாகி இருக்கின்றன.

மராட்டிய மாநிலம் மும்பை, புனே மற்றும் நவி மும்பை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மும்பை நகரம், மும்பை புறநகர், ரத்னகிரி, சிந்துதுர்க், ராய்காட் மாவட்டங்கள் போன்ற பல்வேறு இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்துள்ளது. மும்பையில் இடைவிடாத மழை பெய்தது. இதனால் புறநகர் ரெயில்கள், மெட்ரோ சேவைகள் பாதிக்கப்பட்டன.

1 More update

Next Story