

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
தினமும் 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனாலும் ஊரடங்கு காரணமாக பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பகல்நேர ஊரடங்கு அமலில் இருப்பதாலும், தமிழ்நாடு உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமலில் இருப்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த மாதத்திற்கான (ஜூன்) ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.