திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள்
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

3-ந் தேதி பார்வேத மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம். 8-ந் தேதி சர்வ ஏகாதசி. 12-ந் தேதி ஆட்சியாய நொச்சவளு ஆரம்பம். 17-ந் தேதி தனுர் மாதம் ஆரம்பம். 22-ந் தேதி ஏழுமலையான் சன்னதியில் சின்ன சாஅத்தும் முறை. 23-ந் தேதி வைகுண்ட ஏகாதசி ஆரம்பம். 24-ந் தேதி வைகுண்ட துவாதசி அன்று ஏழுமலையான் சக்ர ஸ்நானம். 28-ந் தேதி பிரணயகலஹ உற்சவம் நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com