திருச்சி - திருப்பதி இடையே சிறப்பு ரெயில்

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
திருச்சி - திருப்பதி இடையே சிறப்பு ரெயில்
Published on

பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோடைகாலத்தையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருச்சி-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

திருச்சி-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06007) வருகிற 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) திருச்சியில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். மறுமார்க்கமாக எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-திருச்சி சிறப்பு ரெயில் (06008) அதே நாட்களில் மதியம் 3 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 1030 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் கரூர், நாமக்கல், சேலம், பங்காரு பேட்டை மற்றும் கே.ஆர்.புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல் லும். இந்த ரெயிலில் 2 ஏ.சி. சேர்கார் பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு சேர்கார் பெட்டிகள், 6 அந்தியோதயா பெட்டிகள் உள்பட 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com