5ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றை ஏலம் தொடங்கியது

தற்போதைய ஏலத்துக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 8-ந்தேதி தொலைத்தொடர்பு துறை வெளியிட்டிருந்தது.
5ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றை ஏலம் தொடங்கியது
Published on

புதுடெல்லி,

தொலை தொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை (ஸ்பெக்டரம்) தொலை தொடர்பு துறை ஏலம் விட்டு வருகிறது. அந்த வகையில் ரூ,96 ஆயிரம் கோடி மதிப்பிலான 10,500 மெகா ஹெர்ட்ஸ் அலைபேசி சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

2010-ம் ஆண்டு ஆன்லைன் ஏல முறை மூலம் ரேடியோ அலைகளை விற்பனை செய்வதற்கான செயல்முறை தொடங்கியதில் இருந்து இது 10-வது ஸ்பெக்ட்ரம் ஏலம் ஆகும். கடைசியாக ஸ்பெக்ட்ரம் ஏலம் 2022-ம் ஆண்டு நடந்தது. இது முதல் முறையாக 5ஜி சேவைகளுக்கான ரேடியோ அலைகளை உள்ளடக்கியது. தற்போதைய ஏலத்துக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 8-ந்தேதி தொலைத்தொடர்பு துறை வெளியிடப்பட்டது.

ஏலத்தின் முதல் நாளான நேற்று டெலிகாம் ஆபரேட்டர்கள் சுமார் ரூ,11,000 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளனர், இது 5 சுற்று ஏலம் கண்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி இந்திய செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா டைரக்டர் ஜெனரல் எஸ்.பி.கோச்சார் கூறுகையில், 5ஜி ஏலங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவைகளை விரைவாக வெளியிடுவதற்கு ஊக்கமளிக்கும், இது மேம்பட்ட கவரேஜ் மற்றும் பெரிதும் மேம்படுத்தப்பட்ட இணைப்புக்கு வழிவகுக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com