கழிவுநீர் கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து ; 3 பேர் பலி

விபத்தில் 2 பேர் படுகாயமைடந்தனர்.
கழிவுநீர் கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து ; 3 பேர் பலி
Published on

லக்னோ,

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த 5 பேர் உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டம் குரவாலி கிராமத்தில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று இரவு காரில் புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கார் இன்று காலை உத்தரபிரதேசத்தின் இட்டாக் மாவட்டம் சகித் பகுதியில் உள்ள சாலையில் வேகமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி பின்னர் அங்குள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த சிவம் (வயது 21), சுனில் (வயது 23, மன்கி (வயது 19) ஆகிய 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேர் படுகாயமைடந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com