மத்தியபிரதேசத்தில் சோகம்: சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

தப்பிச்சென்ற கார் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்தியபிரதேசத்தில் சோகம்: சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கார் மோதி விபத்து

மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் அம்பா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் நேற்று இரவு 3 பேர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பல்னா கிராமத்தைசேர்ந்த கும்கர் சிங் (வயது 60), ரம்கட் (வயது 55), ராஜ்வந்த் (55) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com