ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 12வது ஆண்டு தினம்: 12ரூபாயில் இருந்து டிக்கெட் விலை அறிவித்து தள்ளுபடி

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 12-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சலுகை விலையில் டிக்கெட்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 12வது ஆண்டு தினம்: 12ரூபாயில் இருந்து டிக்கெட் விலை அறிவித்து தள்ளுபடி
Published on

புதுடெல்லி,

குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனது 12ம் ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு விமான பயணிகளுக்கு அதிரடி கட்டண சலுகையை அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணிக்க குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.12 முதல் ஆரம்பிக்கும் என்ற சலுகையை அறிவித்துள்ளது. இந்த 12 ரூபாய் என்பது அடிப்படை கட்டணம் மட்டும்தான். வரிகள் மற்றும் கூடுதல் வரிகள் தனியாக செலுத்த வேண்டும். இந்த சலுகையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை இரண்டுக்கும் பொருந்தும்.

இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சலுகையின் கீழ் குறைந்த அளவிலான இருக்கைகளே விமானத்தில் இருக்கும். முதலில் வருபர்களுக்கே சலுகை கிடைக்கும். இந்த டிக்கெட் விற்பனை இன்று (மே 23) தொடங்கி மே 28 வரை செய்யப்பட உள்ளது. இந்த சலுகை விலை டிக்கெட் மூலம் ஜூன் 26 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 24ம் தேதி வரை விமானத்தில் பயணிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com