சவூதி அரேபியாவில் இருந்து கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்

சவூதி அரேபியாவில் இருந்து கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொச்சி,

சவூதி அரேபியாவில் இருந்து கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சவூதி அரேபியாவில் இருந்து 6 பணியாளர்கள் உட்பட 197 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி 036 விமானம் கோழிக்கோடு நோக்கி சென்றது. அப்போது விமானத்தில் திடீரென ஹைட்ராலிக் எந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து, ஸ்பைஸ்ஜெட் விமானம் கொச்சி விமானநிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இது குறித்து கொச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (சி ஐ ஏ எல்) நிர்வாகம் கூறியதாவது:-

கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஸ்பைஸ்ஜெட்-எஸ்ஜி 036 விமானம் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டதை அடுத்து, மாலை 6:29 மணிக்கு விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஸ்பைஸ்ஜெட் விமானம் 07.19 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது என கொச்சி விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com