"நீங்கள் செய்தது ஆபாசத்தை பரப்பும் செயல்" பாத்திமா ரெஹானா ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

நீங்கள் செய்தது ஆபாசத்தை பரப்பும் செயல் எனக் கூறி சமூக ஆர்வலர் பாத்திமா ரெஹானாவின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
"நீங்கள் செய்தது ஆபாசத்தை பரப்பும் செயல்" பாத்திமா ரெஹானா ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
Published on

புதுடெல்லி

பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பையடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர். பாத்திமா ரெஹானா என்ற பெண் செயற்பாட்டாளரும் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார்.

ரெஹானா பாத்திமா, கடந்த ஜூன் 19 அன்று, தனது அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு யூடியூப் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ #BodyArtPolitics என்ற ஹேஷ்டேக்குடன் 'பாடி அண்டு பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் பகிரப்பட்டு இருந்தது. அரை நிர்வாண நிலையில் பாத்திமா இருக்க அவரின் சிறு வயது மகனும் மகளும் பாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைவது போல அந்த வீடியோ இருந்தது. மேலும் அதில் அவர் தன் அம்மாவின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது. பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும்'.

பாலியல் மற்றும் நிர்வாணம் தடைசெய்யப்பட்ட ஒரு சமூகத்தில் பெண்கள் பாலியல் மற்றும் அவர்களின் உடல்களைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துவதற்காகவே இந்த வீடியோ எடுக்கப்பட்டது.

ஆண் உடலுடன் ஒப்பிடும்போது, பெண்ணின் உடலும் அவளது நிர்வாணமும் 55 கிலோவுக்கு மேல் சதை. கால்கள் இருப்பதைக் கண்டு லெகிங்ஸ் தூண்டப்படுகிறது, அதே நேரத்தில் ஆண் நின்றால் ஆபாசம் இல்லை. இது தற்போது சமூகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தவறான பாலியல் உணர்வுதான். அழகு பார்ப்பவரின் கண்ணில் இருப்பது போலவே, பார்ப்பவரின் பார்வையில் ஆபாசமும் உள்ளதுஎன்றும் அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலானது

இதனால், கேரளாவில் சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவராத வகையில் அவர் மீது திருவல்லா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பாத்திமா ரெஹானா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில் தான் கைதாகாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் ரெஹானா முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் கேரள ஐகோர்ட் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எத்ர்த்து ரெஹானா சுப்ரீம் கோர்ட்டை நாடினார

ரெஹானா பாத்திமா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.

ரெஹானாமனுவை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்டஅமர்வு

இது "ஆபாசத்தை பரப்பும்" செயல் "நீங்கள் இதை ஏன் செய்கிறீர்கள்? நீங்கள் ஒரு சமூக ஆர்வலராக இருக்கலாம் ஆனால் இது என்ன வகையான முட்டாள்தனம்? இது சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் ".

இந்த செயலிலிருந்து வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு என்ன நன்மை கிடைக்கும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com