’ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
’ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
Published on

புதுடெல்லி,

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வரும். ஏற்கனவே கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.

ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் பரிசோதித்து வருகிறது. ரெட்டிஸ் லேப் நிறுவனம் இந்தியாவில் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது. இதையடுத்து, நிபுணர் குழு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்ந்து வருகிறது. நாட்டில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் உச்சம் பெற்று வரும் நிலையில், தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.6 சதவீத செயல் திறன் மிக்கவை என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com