பெண்கள் விடுதியில் ஸ்பை கேமராக்கள் - வார்டன் கைது

கோப்புப்படம்
தெலுங்கானாவில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் ஸ்பை கேமராக்கள் பொருத்திய வார்டனை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் நகராட்சிக்குட்பட்ட கிஸ்தாரெட்டிபேட்டையில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் ஸ்பை கேமராக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விடுதியில் வசிக்கும் பெண்கள் செல்போன் சார்ஜர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்களைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அந்த பெண்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த விடுதியின் வார்டன் மகேஷ்வர் ஸ்பை கேமராக்களை பொருத்தியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார், விடுதி வார்டன் மகேஷ்வரை கைது செய்தனர்.
கேமராக்களை கைப்பற்றிய போலீசார் அதில் பதிவாகியுள்ள தரவுகளை மதிப்பாய்வு செய்து வருகின்றன. அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






