கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு இன்று புனிதர் பட்டம்

கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது. வாடிகனில் நடைபெறும் விழாவில் மத்திய மந்திரி பங்கேற்கிறார்.
கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு இன்று புனிதர் பட்டம்
Published on

புதுடெல்லி,

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 1876-ம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. சீறோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்த இவர், 1914-ம் ஆண்டு அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை நிறுவினார். இந்த சபை தற்போது பல கிளைகளை கொண்டு வளர்ந்துள்ளது.

அயராத இறைப்பணி ஆற்றிய கன்னியாஸ்திரி மரியம் திரேசியா கடந்த 1926-ம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு முக்திபேறு பெற்றவர் என்ற பட்டம் அப்போதைய போப் 2-ம் ஜான் பாலால் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மரியம் திரேசியாவுக்கு கடந்த சில மாதங் களுக்கு முன் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது. வாடிகனில் இன்று நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு போப் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்குகிறார். இந்த விழாவில் மத்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளதரன் தலைமையில் சிறப்புக்குழு ஒன்று பங்கேற்கிறது. இதற்காக இந்த குழுவினர் வாடிகன் சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com