

புதுடெல்லி,
இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனநாயக கோட்பாடுகள், அரசியலமைப்பு விதிகளுக்கு மதிப்பளிக்கப்படும் என நம்புவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை மக்களுக்கு வளர்ச்சிக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்தார்.
இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அதிபர் சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.