காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்...!

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்...!
Published on

காரைக்கால்,

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தெடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தெடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் இன்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 4 படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளர். மேலும், மீனவர்களின் வலைகளையும் கொள்ளையர்கள் பறித்து சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com