இலங்கை பிரதமர் இன்று இந்தியா வருகை


இலங்கை பிரதமர் இன்று இந்தியா வருகை
x

இலங்கை பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஹரிணி அமரசூர்யா இந்தியாவிற்கு வர உள்ளார்.

புதுடெல்லி,

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இன்று (16-ந்தேதி) இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இலங்கையின் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு அவர் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். முன்னதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவிற்கு வருகை தரும் ஹரிணி அமரசூர்யா, இங்கு பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து இருநாட்டு நலன்கள் சார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். இலங்கை பிரதமரின் வருகை, இந்தியா-இலங்கை இடையே உள்ள ஆழமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் என்றும், இந்தியாவின் 'மகாசாகர் தொலைநோக்குப் பார்வை' மற்றும் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' ஆகிய கொள்கைகளை வலுப்படுத்தும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story