சாரதா மடத்தின் தலைவர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

சாரதா மடத்தின் தலைவர் பிரவ்ராஜிகாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரே மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாரதா மடத்தின் தலைவர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்
Published on

கொல்கத்தா,

மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆன்மீக அமைப்பு சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷன். கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா. 102 வயதான பிரவ்ராஜிகாவுக்கு கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சனிக்கிழமை அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து, வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் நண்பகலில் சிகிச்சை பலனின்றி பிரவ்ராஜிகாவின் உயிர் பிரிந்தது. பிரவ்ராஜிகாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரே மோடி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com