ஸ்ரீநகர்: சாட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க சுற்றுலா பயணி விமான நிலையத்தில் கைது

விசாரணையில் சாட்டிலைட் போன் கொண்டுவர ஜெப்ரி எந்த அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்தது.
ஸ்ரீநகர்: சாட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க சுற்றுலா பயணி விமான நிலையத்தில் கைது
Published on

ஸ்ரீநகர்,

இந்தியாவில் சாட்டிலைட் போன் (செயற்கைகோள் மூலம் செயல்படும் செல்போன்) பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியர்கள், வெளிநாட்டினர் சாட்டிலைட் போன் வைத்திருக்க மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று பாதுகாப்புப்படையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, அமெரிக்காவை சேர்ந்த ஜெப்ரி ஸ்கார்ட் பிரதர் என்ற சுற்றுலா பயணியின் உடைமைகள் சோதனை செய்தனர்.

அதில், சாட்டிலைட் போன் இருப்பதை பாதுகாப்புப்படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அமெரிக்க பயணியிடம் பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சாட்டிலைட் போன் கொண்டுவர ஜெப்ரி எந்த அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சாட்டிலைட் போனை பறிமுதல் செய்த பாதுகாப்புப்படையினர், ஜெப்ரியை கைது செய்து ஸ்ரீநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஜெப்ரி உடன் பயணித்த கொல்கத்தாவை சேர்ந்த ஹல்டர் கவுசிக் என்பவரையும் கைது செய்த பாதுகாப்புப்படையினர் விசாரணைக்காக அவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com