எஸ்.எஸ்.எல்.சி தேர்வு சிக்கமகளூரு மாணவிகள் முதலிடம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சிக்கமகளூரு மாணவிகள்
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு சிக்கமகளூரு மாணவிகள் முதலிடம்
Published on

சிக்கமகளூரு:

காநாடகத்தில் கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் சிக்கமகளூருவை சேர்ந்த 2 மாணவிகள் உள்பட ஏராளமானோர் 625-க்கு 625 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா கம்மரடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த அக்குருத்தி என்ற மாணவியும், மூடிகெரே தாலுகா ஆல்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிடித்த சைத்ரா என்ற மாணவியும் 625-க்கு 625 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அந்த 2 மாணவிகளுக்கும் சிக்கமகளூரு மாவட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டினார்கள்

X

Daily Thanthi
www.dailythanthi.com