ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: கர்நாடக மந்திரி சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வருகிற 10-ந் தேதிக்குள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: கர்நாடக மந்திரி சுரேஷ்குமார்
Published on

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

12 லட்சம் இடங்கள்

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மொத்த பாடங்களை 2 ஆக ஒருங்கிணைத்து தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். மொழி பாட தேர்வுக்கு 3,302 மாணவர்கள் ஆஜராகவில்லை. மொத்தத்தில் இந்த தேர்வு எந்த பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு அனைத்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பி.யூ.சி.யில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பி.யூ.கல்லூரிகளில் மொத்தம் 12 லட்சம் இடங்கள் உள்ளன.

பள்ளிகள் திறப்பு

கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விரைவில் அறிக்கை வழங்கும். அதன் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.

இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com