

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும். இது அநேகமாக 96 சதவீதமாக இருக்கும். ஜூலை மாதத்தில் இயல்பைவிட குறைவாகவும், ஆகஸ்டு மாதம் இயல்பான அளவும் பெய்யும். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் 94 சதவீதமும், மத்திய பிராந்தியத்தில் 100 சதவீதமும், தெற்கு பிராந்தியத்தில் 97 சதவீதமும், வடகிழக்கு பிராந்தியத்தில் 91 சதவீதமும் மழை பெய்யும். இதில் 8 சதவீதம் குறையவோ, கூடவோ வாய்ப்பு உள்ளது. கேரளாவில் வழக்கமான தேதியைவிட 5 நாட்கள் தாமதமாக, வருகிற 6-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.