மாநிலங்களிடம் 5.58 கோடி தடுப்பூசி கையிருப்பு

மாநிலங்களிடம் 5.58 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
மாநிலங்களிடம் 5.58 கோடி தடுப்பூசி கையிருப்பு
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 70 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரத்து 565 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

இந்தநிலையில் பயன்படுத்திய தடுப்பூசிகள் போக, மாநிலங்களிடமும், யூனியன் பிரதேங்களிடமும் 5 கோடியே 58 லட்சத்து 07 ஆயிரத்து 125 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 96 லட்சத்து 25 ஆயிரத்து 760 டோஸ் தடுப்பூசிகளை வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com