

சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சிக்கபல்லேனஹள்ளி கிராமத்தில் லட்சுமி வெங்கடராமன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றுமுன்தினம் மர்மநபர்கள் சிலர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து கோவிலுக்கு வந்த பூசாரி பசவராஜ், முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து அவர் உடனே கடூர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர். இதில் உண்டியலில் இருந்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.