வளர்ப்பு மகன், மருமகன் கூட்டு பலாத்காரம்; ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் 2-வது மனைவி பகீர் குற்றச்சாட்டு

காஷ்மீரில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் 2-வது மனைவியின் பலாத்கார சம்பவங்களை பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் வீடியோ எடுத்து வைத்து கொண்டனர்.
வளர்ப்பு மகன், மருமகன் கூட்டு பலாத்காரம்; ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் 2-வது மனைவி பகீர் குற்றச்சாட்டு
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் காஜிப்பூர் பகுதியில் இந்திரா நகர் காவல் நியைத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு முதல் திருமணத்தின் வழியே 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், அந்த அதிகாரி 2-வது திருமணம் செய்து கொண்டார்.

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 40 வயது ஆகிறது. இந்நிலையில், அவர் பரபரப்பு புகார் ஒன்றை போலீசில் தெரிவித்து உள்ளார்.

அதில், திருமணம் ஆன நாளில் இருந்து, 2-வது மனைவியை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்த தொடங்கியுள்ளனர். அவர், இதற்கு மறுத்ததும், அதிகாரியின் மூத்த மனைவியின் வாரிசுகள் கடுமையாக அடித்து, தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரலில், வளர்ப்பு மகனும், மருமகனும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அந்த காலகட்டத்தில் அவருக்கு உணவு எதுவும் கொடுக்காமல் கொடுமை செய்துள்ளனர்.

அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் பலாத்கார சம்பவங்களை வீடியோ எடுத்து வைத்து கொண்டனர். வெற்று காகிதத்தில் கையெழுத்தும் வாங்கி வைத்து கொண்டனர். பெண்ணின் உடல்நலம் மோசமடைந்ததும் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுபற்றி வடக்கு மண்டல காவல் துணை ஆணையாளர் அபிஜித் சங்கர் கூறும்போது, சம்பவம் பற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com