ஸ்டெர்லைட் விவகாரம்: வேதாந்தா நிறுவனம் பிரமாண பத்திரம் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் பிரமாண பத்திரம் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஸ்டெர்லைட் விவகாரம்: வேதாந்தா நிறுவனம் பிரமாண பத்திரம் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
Published on

புதுடெல்லி,

ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்துவருகிறது. இதில் தமிழக அரசு தமது கருத்தை மே மாதம் 4-ந்தேதி நடக்கும் அடுத்த விசாரணையில் தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள கூடுதல் பிரமாணபத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை இயங்கியபோது நேரிடையாக 4 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 20 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கிவந்தது. மேலும் ஆலையை சார்ந்த துணைத்தொழில் நிறுவனங்களில் 2 லட்சம் பேர் பயனடைந்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிரத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா தற்போது இறக்குமதி செய்யும் நாடாக மாறி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் சொத்து, நாட்டின் நன்மைக்காக அதை பயன்படுத்த வேண்டும். நிபுணர் குழுவின் கண்காணிப்பின் கீழ் ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்தப் பிரமாணபத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com