ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என நம்புகிறேன்: நடிகர் விஷால்

ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என நம்புகிறேன் என்று நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என நம்புகிறேன்: நடிகர் விஷால்
Published on

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனுவில் குளறுபடிகள் இருந்ததாக கூறி தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, விஷால் வேட்பு மனுவை நிராகரித்தார்.

வேட்பு மனுவை நிராகரித்தது தொடர்பாக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து விஷால் நேற்று புகார் மனு அளித்தார். அதேபோல், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு டுவிட்டர் வாயிலாக தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட தகவலை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இன்று விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த அராஜகத்தில் இருந்து கடவுள்தான் நாட்டைக்காப்பற்ற வேண்டும் எனவும் தனது டுவிட்டரில் விஷால் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com