பங்கு சந்தை நிலவரம்: சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் உயர்வு

சென்செக்ஸ் குறியீட்டில், இண்டஸ்இண்ட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியனவும், டெக் மகிந்திரா மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகளும் வளர்ச்சி கண்டிருந்தன.
பங்கு சந்தை நிலவரம்: சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் உயர்வு
Published on

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று பிற்பகலில் சாதனை அளவாக உச்சம் தொட்டது. அவற்றில் குறிப்பிடும்படியாக, தனியார் வங்கி பங்குகள் அதிக லாபத்துடன் காணப்பட்டன.

இதன்படி, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று மதியம் 600 புள்ளிகள் வரை உயர்ந்து, 76 ஆயிரம் புள்ளிகளை தொட்டிருந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 23 ஆயிரம் புள்ளிகளாக உயர்ந்து இருந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில், இண்டஸ்இண்ட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகிய வங்கிகளின் பங்குகளும், டெக் மகிந்திரா மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் வளர்ச்சி கண்டிருந்தன.

எனினும், விப்ரோ, என்.டி.பி.சி. மற்றும் மாருதி நிறுவனங்கள் சரிவை சந்தித்திருந்தன. இவற்றில் மதியம் 2 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 457.96 புள்ளிகள் அல்லது 0.61 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து, 75,868.35 புள்ளிகளாக காணப்பட்டது.

இதேபோன்று நிப்டி குறியீடானது, 123.50 புள்ளிகள் அல்லது 0.54 சதவீதம் உயர்ந்து 23,080.60 புள்ளிகளாக காணப்பட்டது. வரலாறு காணாத வகையில் பங்கு சந்தைகள் உச்சம் தொட்டுள்ளன.

தேர்தல் முடிவடைய கூடிய தருணத்தில் பங்கு சந்தைகள் இந்த உச்ச நிலையை அடைந்திருக்கின்றன. இந்த நிலை தொடரும் என வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com