தலையில் கல்லைப்போட்டு மாணவர் கொலை

தலையில் கல்லைப்போட்டு மாணவர் கொலை செய்யப்பட்டார்.
தலையில் கல்லைப்போட்டு மாணவர் கொலை
Published on

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கேம்ப் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முஞ்சண்டி கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகன் பிரஜ்வல் (வயது 16). இந்த சிறுவன் தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரஜ்வல் திரும்பி வரவில்லை. பிரஜ்வல்லை, அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தார்கள். ஆனால் சிறுவனை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலையில் முஞ்சண்டி கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பிரஜ்வல் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதாவது பிரஜ்வலின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். முதலில் ஆயுதங்களால் தாக்கிவிட்டு, அதன்பிறகு மாணவரின் தலையில் கல்லைப்போட்டு மர்மநபர்கள் கொலை செய்திருந்தார்கள்.

மர்மநபர்கள் என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com