வந்தேபாரத் ரெயில் மீது கல்வீச்சு - சிறுவன் காயம்

ரெயில் மீது கல் வீசிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தேபாரத் ரெயில் மீது கல்வீச்சு - சிறுவன் காயம்
Published on

லக்னோ,

வடமாநிலங்களில் வந்தேபாரத் ரெயில் மீது கல்லெறியும் சம்பவங்கள் அடிக்கடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி வந்தே பாரத் ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ராய்பிரேலி அருகே சென்று கொண்டிருந்தபோது சமூகவிரோதிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது பெரிய கற்களை எறிந்தனர்.

இந்தக் கல், வந்தே பாரத் ரெயிலின் கண்ணாடியின் மீது பட்டு, கண்ணாடியை உடைத்து கொண்டு ரெயிலுக்கு உள்ளே பயணம் செய்த சிறுவனை தாக்கியது. சிறுவன் காயம் அடைந்துள்ளார். ரெயில் மீது கல் வீசிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com