வந்தே பாரத் ரெயில் மீது கல் வீச்சு

ரெயில் மீது கல் வீசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே போலீசார் எச்சரித்து உள்ளனர்.
வந்தே பாரத் ரெயில் மீது கல் வீச்சு
Published on

பாலக்காடு,

கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்தே பாரத் ரெயில் சென்று கொண்டிருந்தது. பாலக்காடு மாவட்டம் பரளி பகுதியில் சென்ற போது, ரெயில் மீது கல் வீசப்பட்டது. இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பாலக்காடு ரெயில் நிலையம் வந்த போது, இதுகுறித்து லோகோ பைலட் ரெயில்வே பாதுகாப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. கடந்த 9-ந் தேதி சொரனூரில் இருந்து பாலக்காட்டுக்கு வந்து கொண்டிருந்த சென்னை மெயில் ரெயில் மீது அதே பகுதியில் வைத்து கல் வீசப்பட்டது. இதில் காயமடைந்த பயணி ஒருவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். எனவே, ரெயில் மீது கல் வீசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com