ஓடும் ரெயில் மீது கல்வீச்சு: ரெயில்வே கார்டு படுகாயம்

ரெயில் மீது கல் வீசிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ஓடும் ரெயில் மீது கல்வீச்சு: ரெயில்வே கார்டு படுகாயம்
Published on

மும்பை,

மும்பை மத்திய ரெயில்வே துறைமுக வழித்தடத்தில் நேற்று காலை 5.45 மணி அளவில் பன்வெல் நோக்கி மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. ஜியு நகர் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது தண்டவாளத்தின் ஓரமாக நின்ற மர்ம ஆசாமி திடீரென பெரிய கல்லை எடுத்து ரெயில் மீது வீசினார். அந்த கல் ரெயில் கார்டு பெட்டியில் பணியில் இருந்த கார்டு சுனில் குமாரின் தலையில் பட்டது. இதனால் அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதனை அறிந்த ரெயில்வே போலீசார் உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் ரெயில் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜியுநகர் குடிசைப்பகுதிகள் மற்றும் ரெயில் நிலையப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கல்வீசி தாக்கிய ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com