நடைபயிற்சி சென்ற இளம்பெண்ணை துரத்தி கடித்த தெரு நாய்கள்-ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்


நடைபயிற்சி சென்ற இளம்பெண்ணை துரத்தி கடித்த தெரு நாய்கள்-ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்
x

10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறிய வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஜோத்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் நவ்யா என்ற 18 வயது இளம்பெண் நடை பயிற்சி சென்றார். அங்குள்ள ஜே.கே. நகரில் அவர் நடந்து சென்ற போது அவர் செல்போன் பேசியவாறு சென்றுள்ளார். அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் நவ்யாவை சூழ்ந்தன. இதனால் நவ்யா கத்தி கூச்சலிட்டார்.

அதற்குள் நாய்கள் நவ்யாவை துரத்தி கடித்து குதறியதோடு அவரது ஆடைகளை பிடித்து இழுத்தன. இதற்கிடையே அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தெரு நாய்களை விரட்டினர். பின்னர் நவ்யாவை மீட்டு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நவ்யாவை 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறிய வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின. நாய் தொல்லை தொடர்பாக நகராட்சிக்கு பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

1 More update

Next Story