சிறுத்தைப்புலியை, பூனை என நினைத்து துரத்திய தெரு நாய்கள்; அடுத்து... வைரலான வீடியோ


சிறுத்தைப்புலியை, பூனை என நினைத்து துரத்திய தெரு நாய்கள்; அடுத்து... வைரலான வீடியோ
x
தினத்தந்தி 24 July 2025 1:47 PM IST (Updated: 24 July 2025 5:17 PM IST)
t-max-icont-min-icon

'அது ஒரு பூனைதானே என நினைத்து விட்டன' என்ற தலைப்பில் அந்த எக்ஸ் பதிவு வெளியிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

குடிநீர், உணவு தேவைகளுக்காக வன விலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்து விட்டது. யானை, கரடி, மான் போன்ற காட்டு விலங்குகள், அவற்றின் வாழ்விடங்கள் மனிதர்களின் இருப்பிடங்களாக மாறியது அறியாமலும், வழி தவறியும் நகர பகுதிகளுக்கு வருகின்றன.

சில சமயங்களில் சிங்கம், சிறுத்தைப்புலிகளும் ஊருக்குள் வருகின்றன. உணவுக்காக சிறுத்தைப்புலிகள் இரவில் வேட்டையாட வரும்போது, வீட்டு வாசலில் இருக்கும் வளர்ப்பு நாய்களை பிடித்து சென்று விடுகின்றன.

இந்நிலையில், சிறுத்தைப்புலி ஒன்றை சாலையில் தெருநாய்கள் கும்பலாக துரத்தி சென்றுள்ளன. அது ஒரு பெரிய உருவிலான பூனை என நினைத்து துரத்தியபடி ஓடியுள்ளன.

அந்த சிறுத்தைப்புலி சந்துக்குள் புகுந்து ஓடியது. ஆனால், துரத்தியபடி அருகே சென்ற சிறிது நேரத்தில், அது சிறுத்தைப்புலி என தெரிந்ததும் சென்ற வேகத்தில் அந்த நாய்கள் நாலாபுறமும் சிதறி ஓடின. இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சி பதிவு ஒன்றும் வெளியாகி உள்ளது.

'அது ஒரு பூனைதானே என நினைத்து விட்டன' என்ற தலைப்பில் அந்த எக்ஸ் பதிவு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்கள் இடையே பெருத்த சிரிப்பலையை உண்டாக்கி உள்ளது.

சிரிப்புக்கான எமோஜிக்களை பகிர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், தாங்கள்தான் அந்த பகுதி தலைவர்கள் என்பதுபோல் நினைத்து கொண்டு, அதுபோன்று நடந்து கொள்ளவும் தெரு நாய்கள் முயன்றன.

ஆனால், ஓட தொடங்கியதும், தப்பிப்பதற்கு ஒரு வழியை கூட காணவில்லையே என்பதுபோல் அவை ஓடின என பதிவிட்டு உள்ளார். மற்றொருவர், ஒரே ஒரு நாய் திரும்பி வரவில்லை என நினைக்கிறேன் என்று பகிர்ந்து உள்ளார். இதனால், சிறுத்தைப்புலியிடம் அந்த கும்பலில் ஒரு நாய் சிக்கியிருக்க கூடும் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

1 More update

Next Story